மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசிக்கொடை விழா பிப்ரவரி மாதம் 26–ம் தேதி தொடங்கி கடந்த 7–ம் தேதி வரை நடந்தது. இந்த திருவிழாவில் உள்ளூர் மற்றும் வெளிமாநில பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். கேரளாவில் இருந்து பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து அம்மனை தரிசனம் செய்தனர். இந்த பக்தர்கள் கோவில் உண்டியலில் காணிக்கை செலுத்தினார்கள். இதையொட்டி திருவிழா கால உண்டியல் எண்ணிக்கை நேற்று முன்தினம் தொடங்கியது. நேற்று காலை 2–வது நாளாக உண்டியல் எண்ணும் பணி நடந்தது.
இதில் மொத்தம் ரூ.27 லட்சத்து 63 ஆயிரத்து 806 காணிக்கையாக கிடைத்து இருந்தது. மேலும், 23 கிராம் 950 மில்லி கிராம் தங்கமும், 126 கிராம் 900 மில்லி கிராம் வெள்ளியும், வெளிநாட்டு பணமும் காணிக்கையாக செலுத்தப்பட்டு இருந்தது.
இந்த நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை இணை ஆணையர் பாரதி, உதவி ஆணையர் வெங்கடேஷ், ஆய்வாளர் கோபாலன், முதுநிலை கணக்கர் இங்கர்சால், பத்மநாபபுரம் தேவசம் தொகுதி கண்காணிப்பாளர் ஆனந்தன், மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மேலாளர் ஆறுமுகதரன், என்ஜினீயர் அய்யப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
Surrounded Area