மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில்
10-ம் நாள் மற்றும் நிறைவு நாள் (13-03-2012)
நிகழ்ச்சிகள்
14-03-2012
மண்டைக்காடு அருள்மிகு ஸ்ரீ பகவதி அம்மன் திருக்கோவில் 10-ம் நாள் மற்றும் நிறைவு நாள் நிகழ்ச்சிகள் 13-03-2012 அன்று நடைபெற்றது. காலை 5 மணி முதல் 8 மணி வரை பக்தி பாடல்கள் பாடப்பட்டது. காலை 8 மணி முதல் 9 மணி வரை "இராமாயணம் நிறைவுரை" நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணி முதல் 11.30 மணி வரை குமரி மாவட்ட கம்பன் கழகம் வழங்கிய "மாபெரும் பட்டி மன்ற" நிகழ்ச்சி நடைபெற்றது. பட்டி மன்றம் "கம்ப ராமாயணத்தில் விஞ்சி நிற்பது ஆன்மீகமே! அஈசியலே! என்ற பொருளில் நடைபெற்றது. குமரி மாவட்ட கம்பன் கழக செயலாளர் H.M.சிவநாராயண பெருமாள் நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். கொல்லங்கோடு புனித ஸ்டீபன் கல்வியியை கல்லூரி முதல்வரும், குமரி கம்பன் கழக தலைவருமான முனைவர் S.குமரேசன் நடுவராக இருந்தார்.
|
சிறப்பு பட்டிமன்ற நிகழ்ச்சி |
|
நிகழ்ச்சியை காண வந்த பக்தர்கள் |
காலை 11.30 மணி முதல் மதியம் 1 மணி வரை சிறப்பு சொற்பொழிவு" நிகழ்ச்சி நடைபெற்றது. "திருநீற்றின் பெருமை" என்ற பொருளில் ஹைந்தவ சேவை சங்க துணைத்தலைவர் N.ஆனந்தராஜ் பேசினார். தொடர்ந்து பகல் 1 முதல் பிற்பகல் 3 மணி வரை "மாபெரும் ஆன்மீக சிந்தனை சொல்லரங்கம்" நடைபெற்றது. "மானுட வாழ்வு சிறப்படைய பெரிதும் தேவை பக்தியே! தொண்டே! என்ற தலைப்பில் சொல்லரங்கம் நடைபெற்றது.சொல்லின் செல்வன் சன் TV புகழ் மதுரை பணி நிறைவு பேராசிரியர் த.இராஜாராம் நடுவராக இருந்தார். பக்தியே என்ற அணியில் மதுரையை சேர்ந்த C.S.விசாலாட்சி, நாகர்கோவில் க.கருணாநிதி, இராஜபாளையம் ஆசிரியர் இரத்தின ராஜகுமார் ஆகியோர் இருந்தனர்.
தொண்டே! அணியில் காரைக்குடி பேராசிரியர் இராம.சௌந்தரவல்லி, சிவகாசி ஆசிரியர் சிவ ஜெயகுமார், மத்திகோடு ஆசிரியர் R.இரமேஷ் ஆகியோர் இருந்தனர். மாலை 3 மணி முதல் 4 மணி வரை மாணவ மாணவிகளை பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு ஹைந்தவ சேவா சங்க தலைவர் V.கந்தப்பன் தலைமை தாங்கினார். கருமன்கூடல் தொழில் அதிபர் T.முருகேசன் முன்னிலை வகித்தார். நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனை மருத்துவர் Dr.N.B. வெங்கட்ராமன், நாகர்கோவில் குமரன் ஆட்டோ மொபைல்ஸ் மேலாண்மை இயக்குநர் Er. K.சுப்பிரமணியன் ஆகியோர் பாராட்டுரை வழங்கினர். திங்கள்நகர் தொழில் அதிபர் A.நடராஜன் மற்றும் திசையன்விளை அரிமா மாவட்ட முன்னாள் ஆளுநர் Ln.T. சுயம்புராஜன் ஆகியோர் பரிசுகளை வழன்கினோர்.
|
மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெற்ற சமய மாநாட்டு காட்சி |
|
கடலூர் இராம முத்து குமரனார் பேசிய காட்சி |
|
சமய மாநாட்டில் கலந்து கொண்டோர் |
|
சமய மாநாட்டை பார்வையிடும் பக்தர்கள் |
|
காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலய நிறுவனர் பொன் காமராஜ் சுவாமிகள் பேசிய காட்சி |
|
ஹைந்தவ சேவா சங்க தலைவருக்கு பொன்னாடை போர்த்திய அணிவித்த காட்சி |
|
மண்டைக்காடு நிகழ்ச்சிகளை இணையதளத்தில் வெளியிட்ட "மணவை மலர்" நிறுவனர் கௌரவிக்கப்படும் காட்சி |
|
"மணவை மலர்" மேலாளர் கௌரவிக்கப்படும் காட்சி |
|
ஹைந்தவ சங்க தலைவருக்கு நன்றி தெரிவிக்கும் காட்சி |
சமய மாநாட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டோருக்கு
பொன்னாடை அணிவித்த காட்சி
ஹைந்தவ சேவா சங்க நிர்வாகிகள் கௌரவிக்கப்பட்ட காட்சி
மாலை 7 மணி முதல் இரவு 10 மணி வரை "சமய மாநாடு" நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஹைந்தவ சேவா சங்க தலைவர் V.கந்தப்பன் தலைமை தாங்கினார். இருளப்பபுரம் Er.S.பிரபாகரன் மற்றும் நாகர்கோவில் என்.ஜி.ஓ.காலனி கலைவாணி தகவல் நிலைய அதிபர் P.கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தார். காட்டுவிளை ஸ்ரீ தர்ம சாஸ்தா கோவில் இறைவணக்க மாணவர்கள் R.V.நிஷாந்த் மற்றும் R.K.ராம்குமார் ஆகியோர் இறைவணக்கம் வழங்கினர். "சக்தியின் அருள்" என்ற தலைப்பில் கடலூர் ஐந்தாம் உலக தமிழ் சங்க நிறுவனர் கவி முகில் இரம.முத்து குமரனார் அவர்கள் சொற்பொழிவு நிகழ்த்தினர். தொடர்ந்து தக்கலை வை.பாலசந்திரன், நாகர்கோவில் பிஜேபி மூத்த தலைவர் M.R.காந்தி, காணிமடம் யோகிராம் சுரத்குமார் மந்திராலயம் நிறுவனர் காணிஞானி பொன் காமராஜ் சுவாமிகள், நாகர்கோவில் கோட்டாறு சேவாபாரதி தலைவர் M.குமாரசுவாமி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு வழங்கினர். R.முருகன் நன்றிவுரை வழங்கினார்.
|
பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்ற காட்சி |
பக்தி இன்னிசை கச்சேரி வீடியோ
இரவு 10 மணி முதல் 12 மணி வரை "இன்னிசை" நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து இரவு 12 மணிக்கு மேல் "ஒடுக்கு பூஜை" நடைபெற்றது. ஒடுக்கு பூஜை நிகழ்ச்சியை தொடர்ந்து தீபாராதணை நிகழ்ச்சியுடன் கொடி இறக்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஒடுக்கு பூஜை சிறப்பு காட்சிகள்
|
ஒடுக்கு பூஜைக்கான பொருட்கள் எடுத்து வரப்படுகிறது |
|
ஒடுக்கு பூஜை பவனி வருதல் |
|
ஒடுக்கு பூஜை காண குவிந்த பக்தர்கள் வெள்ளம் |
|
கோவிலை சுற்றும் பவனி |
|
ஒடுக்கு பூஜைக்கான உணவு பொருட்கள் எடுத்துவரப்படுகிறது |
|
ஒடுக்கு பூஜை முடிந்து பிரசாதம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வனத்துறை அமைச்சர் கே.டி.பச்சைமால் |
|
பிரசாதம் வாங்க வரிசையில் நிற்கும் பக்தர்கள் |
|
ஒடுக்கு பூஜை முடிந்தபின்னர் செல்லும் பக்தர்கள் |
ஒடுக்கு பூஜை வீடியோ - 1
ஒடுக்கு பூஜை வீடியோ - 2
மண்டைக்காடு கோவிலை சுற்றி நடைபெற்ற காட்சிகள்
|
மண்டைக்காடு செல்லும் பக்தர்களுக்காக மோர் வழங்க தயாராகும் ஒரு குடும்பம் |
|
மோர் வழங்கப்படும் காட்சி |
|
பொங்கலிட பாத்திரத்துடன் செல்லும் இளைஞர்கள் |
|
பொங்கலிட தேவையான விறகுகள் கொண்டு செல்லும் இளைஞர்கள் |
|
திறந்த ஆட்டோவில் சமையலுக்கு தேவையான பொருட்களுடன் செல்லும் ஒரு கோஷ்டி |
|
பரப்பற்று பகுதியில் மோர் வழங்க தயாராகி கொண்டிருக்கும் பக்தர் |
|
கோவிலுக்கு திறந்த ஆட்டோவில் செல்லும் ஒரு குடும்பத்தார் |
|
பக்தர்களின் தாகம் தீர்க்க காத்திருக்கும் பெரியவர் |
|
தோப்புகளில் சமையல் நடைபெறும் காட்சி |
|
கோழி விற்பனை செய்யப்பட்ட காட்சி |
|
கிளி ஜோசியர் |
|
மண்டைக்காடு பகுதியில் மோர் குடிக்கும் பக்தர்கள் |
|
விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ள அழகிய பூ செடிகள் |
|
மண்டைக்காட்டில் வைக்கப்பட்ட மோர் பந்தல் |
|
பாப்கார்ன் கடை |
|
எய்ட்ஸ் விழிப்புணர்வு மையம் அமைக்கப்பட்டிருந்து |
|
வட மாநிலத்தவர்கள் விற்பனைக்கு கொண்டு வந்த கொட்டுகள் |
|
"கடலை" பாட்டி |
|
சேவா பாரதி சார்பில் மோர், பானக்காரம் வழங்கப்பட்டது |
|
இஸ்கான் சார்பில் புத்தக விற்பனை நிலையம் அமைக்கப்பட்டிருந்தது |
|
கொழுந்து விற்பனைக்கு வைக்கப்பட்ட காட்சி |
|
பக்தர்களின் கூட்டம் |
|
கடலை, வெல்லம் விற்பனை செய்யப்பட்ட காட்சி |
மீன் விற்பனை வீடியோ காட்சி
கடற்கரை வீடியோ காட்சி
மணவாளக்குறிச்சி அன்னதான வீடியோ காட்சி
பக்தர்கள் கூட்டம் வீடியோ
|
பக்தர்களை ஒழுங்குபடுத்தும் போலீசார் |
|
சூடுபிடித்த மீன் வியாபாரம் |
|
காய்கறி விற்பனை செய்யும் பாட்டி |
|
மண்டைக்காடு கடலின் சாந்த தோற்றம் |
|
பொதுமக்களை எச்சரிக்கை செய்யும் போலீஸ் |
|
கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் |
|
பனங்கிழங்கு விற்பனை செய்யும் பாட்டி |
|
பக்தர்கள் வெள்ளம் |
|
சிறப்பு பேருந்து |
|
நடந்தும், இருசக்கர வாகனங்களிலும் செல்லும் பக்தர்கள் |
|
பேருந்துகளில் கூட்ட மிகுதியால் பயணிகளை கண்காணிக்கும் செக் இன்ஸ்பெக்டர் |
|
பேருந்திலிருந்து இறங்கி கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் |
|
நாகர்கோவில் செல்லும் சிறப்பு பேருந்து |
|
விற்பனைக்கு வைக்கட்ட தர்பூசணி |
|
வாகனங்களில் செல்லும் போது ஏற்படும் பஞ்சர்களை ஒட்ட உடனடி நடமாடும் பஞ்சர் வண்டி |
|
காட்டு பொங்கல் இடும் இளைஞர்கள் |
|
மணவாளக்குறிச்சி பகுதியில் பேருந்தில் செல்லும் பக்தர்களுக்கு மோர் வழங்கப்பட்டது |
|
வடக்கன்பாகத்தில் மோர் வழங்கும் காட்சி |
|
மணவாளக்குறிச்சி சந்திப்பில் மோர் வழங்கும் காட்சி |
|
மோர் வழங்கிய கம்யூனிஸ்ட் கட்சியினர் |
|
பேருந்தில் பயணம் செய்வோருக்கு மோர் வழங்கப்பட்டது |
|
விதிமுறை மீறி செல்லும் மூன்று பேர் (2 பேர் போலீசார் |
|
பாரதிய ஜனதா கட்சி சார்பில் வைக்கப்பட்ட போர்ட் |
|
மதியம் இலவச உணவு பாரதிய ஜனதா கட்சி சார்பில் வழங்கப்பட்டது |
|
பாரதிய ஜனதா கட்சி மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி இலவச உணவு வழங்கும் நிகழ்ச்சியை துவங்கி வைத்தார் |
|
மணவாளக்குறிச்சி பகுதியில் இரவில் சுக்கு காப்பியும், சீவலும் வழங்கப்பட்டது |