About Us

“மணவை முரசு" தளத்தை பற்றி...

அனைவருக்கும் வணக்கம்..
அனைவரையும் “மணவை முரசு” தளம் அன்போடு வரவேற்கிறது...

நோக்கம்:
“மணவை முரசு” தளம் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ‘மணவாளக்குறிச்சி’ என்ற நகரின் பெயரில் உருவாக்கப்பட்டதாகும். இத்தளத்தில் மணவாளக்குறிச்சி, மண்டைக்காடு, சேரமங்கலம், திங்கள்நகர், குளச்சல், கடியப்பட்டணம், முட்டம், வெள்ளிசந்தை, குருந்தன்கோடு, திருநயினார்குறிச்சி ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய செய்திகளை வெளியிடுகிறது. இதன் முக்கிய நோக்கம் உள்ளூர் செய்திகள், தகவல்கள் மற்றும் நிகழ்வுகள் வெளிஇடங்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும், இப்பகுதிகளை சார்ந்தவர்கள் அறியும் பொருட்டு உருவாக்கப்பட்டதாகும்.

தோற்றம்:
மணவாளக்குறிச்சி பகுதியை பற்றிய சில தகவல்களை முதலில் “FaceBook” மூலமாக வெளியிடப்பட்டு வந்தது. இந்நிலையில் நண்பர்களின் ஆலோசனையின் பேரில் ஒரு தளமாக உருவாக்கப்பட்டு உள்ளூர் செய்திகள் வெளியிடப்படுகிறது.

வளர்ச்சி:
தளம் ஆரம்பிக்கப்பட்டபோது வாரந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் செய்திகள் வெளியிடப்பட்டு வந்தது. பின்னர் பல அன்பர்களின் வேண்டுகோளின்படி தினமும் செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. “மணவை முரசு"  தளம் பற்றி ஏராளமானோர் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்ததுடன், பல்வேறு ஆலோசனைகளும் வழங்கினர். அது தளம் வளர மிக உதவியாக இருந்தது. மேலும் இத்தளம் பற்றி அறிந்தவர்கள், அவர்களுடைய நண்பர்களுக்கு தெரியபடுத்தி, தளம் மென்மேலும் வளர காரணமாக இருந்தனர். இது நம்மை ஊக்கப்படுத்தி மேலும் சிறப்புடன் செயல்பட காரணமாக அமைந்தது.

செய்திதன்மை:
இத்தளத்தில் வெளியிடப்படும் உள்ளூர் செய்திகள் பெரும்பாலும் நேரடியாக சென்று சேகரிக்கப்படுகிறது. மேலும் செய்திகள் தினசரி நாளிதழ்கள் மற்றும் இணைய நாளிதழ்களில் இருந்தும் பெறப்பட்டு வெளியிடப்படுகிறது. இத்தளத்தில் தனிநபரை குறைகூறும் செய்திகளையோ, சமூக பிரச்சனைக்குரிய செய்திகளையோ வெளியிடாமல் பார்த்து கொள்கிறோம்.

செய்தி சேகரிப்பாளர்கள்:
மணவாளக்குறிச்சி அதன் சுற்றுவட்டார பகுதி செய்திகள் பெரும்பாலும், மணவாளக்குறிச்சி பகுதியை சேர்ந்த புதியபுயல் முருகன், மணவை எழில் ஆகியோர் மூலம் சேகரிக்கப்படுகிறது. வெளிவட்டார செய்திகள் பல நண்பர்கள் மூலம் சேகரிக்கப்படுகிறது. மேலும் பலர் தொலைபேசி மூலம் நம்மை தொடர்பு கொண்டு செய்தி பற்றிய தகவலை கூறுகின்றனர். கோயில்கள், மசூதிகள் மற்றும் தேவாலயங்கள் திருவிழா நிகழ்வுகளை பற்றிய செய்திகள் அப்பகுதியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் சேகரித்து தருகின்றனர்.

குமரி இன்ஃபோ:
கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய முழுமையான தகவலை வெளியிடும் பொருட்டு “குமரி இன்ஃபோ” என்ற தளம் உருவாக்கப்பட்டது. இது “மணவை முரசு” தளத்தில் சார்பு தளமாகும். இத்தளத்தில் இரயில்வே செய்திகளை, குமரி மாவட்ட இரயில்வே பயணியர்கள் சங்க செயலாளர் எட்வின் ஜெனி என்பவரும், பயனுள்ள தகவல்களை லண்டனில் வசிக்கும் மரிய செல்வராஜ் என்பவரும், வளைகுடா செய்திகளை சாதிக் சலீம் என்பவரும் வழங்கி வருகின்றனர். மேலும் "குளச்சல் எக்ஸ்பிரஸ்"என்ற தளம் வரலாற்று சிறப்புமிக்க குளச்சல் நகரத்தை பற்றி பல்வேறு தகவல்களை வழங்கும் பொருட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

விளம்பரங்கள்:
“மணவை முரசு” தளத்தில் விளம்பரங்கள் குறைந்த செலவில் வெளியிடுகிறோம். விளம்பரங்களுக்கான கட்டணங்களை தெரிந்துகொள்ள "Advertise with Us" என்ற பகுதியை காணவும். 

நன்றி

அன்புடன்
“மணவை முரசு”
எம்மெஸ்.

Post a Comment