இந்தியாவில் கொரோனா பரவலின் 2-வது அலை மிக மோசமான சூழ்நிலையில் உள்ளது. மக்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக தமிழகமும் அதிகமாக பாதித்துள்ளது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், திறம்பட கையாட்டு வருகிறார். அதன்படி தமிழகத்தில் ஏற்கனவே இரு வாரகால ஊரடங்கு போடப்பட்ட நிலையில், மேலும் ஒரு வாரகாலம் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பலபகுதிகளில் பல்வேறு தரப்பினர் சமூகநலப் பணிகளை செய்து வருகின்றனர். கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்தவர்களின் இறுதிச்சடங்கை இஸ்லாமிய அமைப்புகள் மனமுவந்து செய்து வருகின்றனர்.
இறுதிச்சடங்கை செய்யும் பணியில் ஈடுபடும் நபர்கள், கொரோனா பரவல் ஏற்படாதவண்ணம் பிபிஇ கிட் எனப்படும் உடையை போட்டுக்கொள்ள வேண்டும்.
இந்நிலையில், மணவாளக்குறிச்சி வெல்கம் குக்கிங் அண்ட் கேட்டரிங் சர்வீஸ் உரிமையாளர் சேக் மாஸ்டர் 15 பிபிஇ கிட்டுகளை, குளச்சல் ஏரியா பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆஃப் இந்தியாவின் தன்னார்வலர்களுக்கு இலவசமாக வழங்கினார்.
செய்தி மற்றும் போட்டோ
அஸீம், எஸ்டிபிஐ
மணவாளக்குறிச்சி
Tags:
Manavai News