கல்வி

Heights Computer Centre
Opposite New SBT Bank, Main Road,
Manavalakurichi
பயிற்சி நிலைய நிர்வாகி 
    இந்தியாவின் முக்கிய நகரங்களில் கம்ப்யூட்டர் பயிற்சி மற்றும் பேஷன் டெக்னாலஜி போன்றவை பயின்றுவிக்கும் தலைசிறந்த இந்தியாவின் No.1கம்ப்யூட்டர் பயிற்சி நிலையம் Heights Computer Centre என்ற நிறுவனம் ஆகும். இங்கு அனைத்து கம்ப்யூட்டர் பயிற்சிகளும் குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சியில் சேரும் அனைவருக்கும் கட்டணத்தில் 50% சலுகை அளிக்கப்படுகிறது.  

Center Head
     "Heights Computer Centre" என்ற கணினி மையம் மணவாளக்குறிச்சியில் இருந்து குளச்சல் செல்லும் மெயின் ரோட்டில், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் எதிர்புறத்தில் அமைந்துள்ளது. புதிய கம்ப்யூட்டர்கள், நவீன கம்ப்யூட்டர் ஆய்வகம், அனைத்து பயிற்சிக்கும் மேம்படுத்தப்பட்ட புத்தகங்கள், தகுதி வாய்ந்த அனுபவத்துடன் கூடிய ஆசிரியர்கள் கொண்டு இப்பயிற்சி நிலையம் இயங்குகிறது.

சிறப்பு அம்சங்கள் 
  • Heights Computer Centre An ISO 9001:2008 Certified Institute
  • வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதியதக்க அளவிலான சான்றிதழ் வழங்கப்படுகிறது.
  • தனித்தனி கம்ப்யூட்டர் பயிற்சிக்கு வழங்கப்படும்.
  • குறைந்த பயிற்சி கட்டணம்
  • வாரத்தில் எல்லா நாட்களிலும், வகுப்புகள் நடைபெறும்.
  • Internet, Browsing வசதி உண்டு
பயிற்றுவிக்கப்படும் பாடங்கள்

* MS - OFFICE * KIDS EDUCATION  * C & C++  * VISUAL BASIC  * TALLY  * DOA  * DTP  * .NET  * JAVA  * DACP  * DCA  * DFA  * DIT  * HDCA  * PGDCA  * PGDCTT 

Computer Lab
பயிற்சியில் சேர விரும்புவோர் கீழ்காணும் தொலைபேசி எண்ணை தொடர்பு  கொள்ளவும்.
04651-239444,  99426 14444

அரசு தொடக்கப்பள்ளி
மணவாளக்குறிச்சி 

   மணவாளக்குறிச்சியில் அமைந்துள்ள அரசு தொடக்கப்பள்ளி 1903 ம் ஆண்டு துவக்கப்பட்டது. 108 ஆண்டு கால பழமை வாய்ந்த பள்ளிக்கூடமாக திகழ்கிறது. இந்திய சுதந்திரம் அடைவதற்கு முன், குமரி மாவட்டம் கேரள திருவாங்கூர் சமஸ்தானத்தில் இணைந்திருந்த போது, இப்பள்ளி மலையாள மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பின்னர், குமரி மாவட்டம் 1947 முதல் 1956 வரை திருவிதாங்கூர் மன்னரின் சுய ஆளுகைக்குள் இருந்தது.  சிறு, குறு நில மன்னர்களின் சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைந்த போது, குமரி மாவட்டம் கேரள மாநிலத்துடன் இணைந்திருந்தது.  கன்னியாகுமரி மாவட்ட மக்களின் தாய்மொழி தமிழாக இருந்தாலும் அவர்கள் மலையாள மொழிப் பகுதியாகிய கேரளத்தோடு இணைந்திருக்க விரும்பவில்லை. மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தின் வளர்ச்சி கேரள அரசால் புறக்கணிக்கப்பட்டது. இந்நிலையில் மார்ஷல் நேசமணி தலைமையில் விடுதலைப் போராட்டம் வெடித்தது. 1956, நவம்பர் முதல் நாள் குமரி மாவட்டம் தமிழ் நாட்டின் பகுதியாக மாறியது.

தற்போதைய தலைமை ஆசிரியை
    அதன் பின்னர், தமிழ் மற்றும் மலையாள மொழியில் கல்வி கற்பிக்கப்பட்டது. மலையாள மொழி வழி கல்வி பயில்பவர்களின் எண்ணிக்கை நாளடைவில் குறைந்ததால் தமிழ் வழி கல்வியாக மாறியது. இன்று, மணவாளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் வசிக்கும் அநேக மக்கள், தங்களுடைய ஆரம்ப நிலை கல்வியை இந்த பள்ளியிலேயே ஆரம்பித்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை, சராசரியாக ஆண்டுக்கு, 700 முதல் 800 பேர் வரை பயின்ற பள்ளியாக விழங்கியது. சில கல்வியாண்டில் சுமார் 1000 மாணவ, மாணவியருக்கு மேல் படித்த பள்ளியாக கூறப்படுகிறது. தற்போது, ஆங்கில பள்ளிகளின் அதிகபடியான தோற்றமும், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ஆங்கில மொழியில் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்திலும், மாதந்தோறும் அதிக பணத்தை செலவு செய்து ஆங்கில வழி பள்ளியில் கல்வி கற்க அனுப்புகிறார்கள். இதனால் 100 ஆண்டுகால பெருமை வாய்ந்த இப்பள்ளியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. 2010 - 11 கல்வியாண்டில் 300 மாணவ, மாணவியருக்கும் குறைவாகவே படிக்கின்றனர்.

பாபுஜி மேல்நிலைப் பள்ளி
மணவாளக்குறிச்சி

    மணவாளக்குறிச்சி கடற்கரை சாலையில், புதிய பேருந்து நிலையத்தின் அருகில் அமைந்துள்ளது பாபுஜி கல்வி நிறுவனங்களாகும். இந்த கல்வி நிறுவனங்கள் "யோவா அறக்கட்டளையில்" கீழ் தற்போது இயங்கி வருகிறது. பாபுஜி மேல்நிலைப் பள்ளி 1951 ம் ஆண்டு "தாடி சார்" என்றழைக்கப்படும் உயர்திரு. ஜி.சி. சந்திர சேகர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் இராமச்சந்திரன் அவர்களால் நிர்வகிக்கப்பட்டது. 

தாளாளர்
    தற்போது, கடியப்பட்டணத்தை சார்ந்த தொழில் அதிபர் நசரேத் சார்லஸ் அவர்களால் நிர்வகிக்கப்படுகிறது. இவரின் நிர்வாகத்தின் கீழ் கல்வி நிறுவனம் வந்த பின்னர், மிக அதிநவீன முறையில் பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டன. பெரிய கட்டிடங்களுடனும் அனைத்து வசதிகளுடனும் பள்ளி கட்டப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் மிக நவீன முறையில் கட்டப்பட்ட பள்ளியாக விளங்குகிறது. 

பாடப்பிரிவுகள்

      ஆரம்பத்தில் தமிழ் வழி கல்வி 6 -ம் வகுப்பு முதல் 12 -ம் வகுப்பு வரை கற்பிக்கப்பட்டு வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஆசிரியர் பட்டைய பயிற்சி (TTC) யும் பயிற்றுவிக்கப்பட்டது. 2008-09 கல்வியாண்டு முதல், தமிழ் மொழி வழி கல்வியுடன் ஆங்கில வழி கல்வியும் ஆரம்பிக்கப்பட்டது. தற்போது, ஆங்கில வழி கல்வியில் 6, 7, 8 -ம் வகுப்பும், 11, 12 -ம் வகுப்பு மேல்நிலை கல்வியும் நடத்தப்படுகிறது. மேல்நிலை கல்வியில் கணிதம், அறிவியல், வரலாறு மற்றும் தொழிற் கல்வி போன்ற பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கபட்டன. 2008 -09 கல்வியாண்டு முதல் கம்பியூட்டர் பாடபிரிவும் பயிற்றுவிக்கப்படுகிறது. நவீன முறையில் கட்டப்பட்ட நூலகம், கணினி ஆய்வு மையம், உயிரியல் ஆய்வு கூடம் போன்றவையும் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளியில் தலைமை ஆசிரியராக கிறிஸ்டோபர் அவர்கள் பணியாற்றி வருகிறார். 2011-12 ம் கல்வி ஆண்டில் 1175 மாணவ, மாணவியரும், ஆங்கில வழி கல்வியில் 206 மாணவ மாணவிகளும் கல்வி பயில்கின்றனர்.

பாபுஜி கல்வியியல் கல்லூரி (B.Ed.)

    திரு. நசரேத் சார்லஸ் தாளாளராக பொறுப்பேற்ற பின்னர், பாபுஜி மேல்நிலை பள்ளி வளாகத்தில் "பாபுஜி கல்வியியல் கல்லூரி" பெரிய அளவில் கட்டப்பட்டது. ஒவ்வொரு கல்வியாண்டும் 100 மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றனர். தமிழ், ஆங்கிலம், இயற்பியல் அறிவியல், உயிரியல் அறிவியல், கணினி அறிவியல் போன்ற பாடப் பிரிவுகளில் கல்வியியல் கல்வி கற்பிக்கப்படுகிறது. கல்லூரியின் முதல்வராக திரு. P. ரெஞ்சிதம் அவர்கள் பணியாற்றுகிறார்.  பாபுஜி கல்வி நிறுவனங்களின் ஒரு அங்கமான "பாபுஜி பொறியியல் கல்லூரி" வரும் கல்வியாண்டு முதல் செயல்பட துவங்கப்பட இருக்கிறது. விரைவில் முதுநிலை கல்வியல் கல்வியும் (M.Ed.) ஆரம்பிக்கப்பட இருக்கிறது. பாபுஜி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியாக திரு. ஜாண்சன் அவர்கள் பணிபுரிகிறார்.

அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளி
மணவாளக்குறிச்சி

   மணவாளக்குறிச்சி, கடற்கரை செல்லும் சாலையில் 1947 -ம் ஆண்டு இப்பள்ளி அரசு தொடக்க பள்ளியாக ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பிக்கப்பட்ட போது ஆண்கள் மற்றும் பெண்கள் சேர்ந்து படிக்கும் கல்வி கூடமாக இருந்தது. பின்னர், 1962-ல் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. அன்று முதல் பெண்கள் மட்டும் படிக்கும் அரசு மகளிர் உயர்நிலை பள்ளியாக மாறியது. மாணவர்கள் அனைவரும் பாபுஜி மேல்நிலை பள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டனர். 1996 -ம் ஆண்டு இப்பள்ளி மேல்நிலை பள்ளியாக மாறியது. 

   அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தற்போது, கணிதம், அறிவியல், கணக்கியல் மற்றும் கணினி அறிவியல் போன்ற பாடப்பிரிவுகள் மேல்நிலைக் கல்வி பயின்றுவிக்கப்படுகிறது. 2011-12 ஆம் கல்வி ஆண்டில் மொத்தம் 544 மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். மேல்நிலை வகுப்பில் மட்டும் 199 மாணவிகள் படிக்கின்றனர். பள்ளியின் தலைமை ஆசிரியராக திரு. லாரன்ஸ் அவர்கள் பணியாற்றி வருகிறார். 

Post a Comment

Previous News Next News