மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியை சேர்ந்தவர் மரணம்

மணவாளக்குறிச்சி, ஆசாரிதெரு பகுதியில், அனைவராலும் அன்போடு “பட்டாளம்” என்று அழைக்கப்படுபவர் குமாரதாஸ். இவருடைய மனைவி லைசம்மாள் (வயது 65).
லைசம்மாள் அவர்கள் கடந்த சில நாள்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வயது முதிர்வின் காரணமாக இன்று காலை 8:45 மணியளவில் இயற்கை எய்தினார்.

அன்னாரது உடல் நல்லடக்கம் இன்று மாலை மணவாளக்குறிச்சி, வடக்கன்பாகம் சி.எஸ்.ஐ. திருச்சபை மையவாடியில் வைத்து நடைபெருகிறது.

மரணமடைந்த லைசம்மாள் அவர்கள், மணவாளக்குறிச்சி, சின்னவிளை சாலையில் உள்ள ஜாண் டிஜிட்டல் ஸ்டுடியோ மற்றும் வீடியோ நிறுவன உரிமையாளர் ஜாண் பென்சிகர் அவர்களின் மாமியார் ஆவார்.

Post a Comment

Previous News Next News