மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடைவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் எட்டாம் கொடைவிழா: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
19-03-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் எட்டாம் கொடைவிழா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு பகவதி அம்மனை சாமிதரிசனம் செய்தனர்
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசி கொடை விழா கடந்த 1-ம் தேதி தொடங்கி 10-ம் தேதி நிறைவு பெற்றது. நேற்று முன்தினம் எட்டாம் கொடை விழா நடைபெற்றது. இதையொட்டி காலை 4.30 மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 4.40 மணிக்கு நிர்மால்ய தரிசனமும், 5.15 மணிக்கு பஞ்சாபிஷேகமும், 6 மணிக்கு உஷ பூஜை மற்றும் உதயமார்த்தாண்டன் பூஜையும் நடைபெற்றது.
மதியம் 1 மணிக்கு உச்சிகால பூஜையும், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை பூஜையும், இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜையும் நடைபெற்றது. விழாவில் குமரி மாவட்ட பக்தர்கள் மட்டுமின்றி கேரள பக்தர்களும் ஏராளமானோர் கலந்து கொண்டு கடலில் கால் நனைத்துவிட்டு வந்து சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் தோப்புகளில் சமையல் செய்தனர்.
மேலும் ஏராளமான பெண் பக்தர்கள் பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பலத்த பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

Post a Comment

Previous News Next News