ரூ.129 கோடி செலவில் புதிய மேம்பாலம் பணிகளை, மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைத்தார்

நாகர்கோவிலில் போக்கு வரத்து நெரிசலை தவிர்ப்பதற் காக பார்வதிபுரத்தில் மேம் பாலம் அமைக்க மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ் ணன் நடவடிக்கை மேற் கொண்டார். அதைத் தொடர்ந்து பார்வதிபுரத்தில் ரூ.128.60 கோடி செலவில் ‘ஒய்’ வடிவில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப் பட்டது. இதற்காக சோதனை தூண்களும் அமைக்கப்பட்டன. இந்த நிலையில் பார்வதிபுரத்தில் அமைய உள்ள மேம்பாலத்திற்கு பூமி பூஜை நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பங்கேற்று மேம்பால பணி களை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து அவர் பேசியபோது கூறியதாவது:–
நாகர்கோவில் நகரின் போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் பார்வதிபுரத்தில் ரூ.128.60 கோடி செலவில் மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் இன்று (நேற்று) தொடங்கப்பட்டுள்ளன. இந்த பாலம் 1764 மீட்டர் நீளத்தில் அமைகிறது. 100 தூண்களுடன் நவீன முறையில் அமைக்கப்பட உள்ளது. மேலும் பாலத்தின் கீழ் பகுதியில் பூங்கா அமைக்கவும் திட்டமிட்டிருக்கிறோம். இந்த பணிகளை 2 ஆண்டுகளில் முடிக்க ஒப்பந்தம் போடப் பட்டு உள்ளது. எனினும் மக்களின் எதிர்பார்ப்பை கருத்தில் கொண்டு ஒப்பந்த காரர்கள் ஒரு ஆண்டுக்குள் இந்த பணியை முடித்துத்தர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இதேபோல் பறக்கை சந்திப்பில் இருந்து கோட்டார், செட்டிக்குளம், கலெக்டர் அலுவலக சந்திப்பு, டெரிக் சந்திப்பு வழியாக மத்தியாஸ் வார்டு வரை ஒரு மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப் பட்டிருக்கிறது. இதற்கான ஆய்வு பணிக்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. ஒழுகினசேரி முதல் வடசேரி வரை ஒரு மேம்பாலம் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த பாலப்பணிகளை டிசம்பர் 2018–க்குள் முடிக்க வேண்டும் என்று கூறியுள்ளோம்.

குமரி மாவட்டத்தில் 4 வழிச்சாலை அமைக்க நடவடிக்கை மேற்கொண்ட போது பல எதிர்ப்புகள் வந்தன. பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டது. அனைத்து வழக்குகளையும் தகர்த் தெறிந்து பணியை தொடங்கி னோம். இருப்பினும் 4 வழிச் சாலை பணிகளால் சுற்றுச் சுழல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதா? என்று ஆய்வு செய்ய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

அதைத் தொடர்ந்து டெல் லியில் இருந்து சுற்றுச்சூழல் துறை அதிகாரிகள் இங்கு வந்து ஆய்வு செய்தனர். ஆய்வுக்கு பிறகு குமரி மாவட்டத்தில் சாலைப்பணி களை தொடர எந்த தடையும் இல்லை என்று அறிவித்தனர். இதனையடுத்து பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. குமரி மாவட்டத்தில் ரூ.3,400 கோடியில் இரட்டை ரெயில் பாதை அமைக்க மத்திய அரசு திட்டமிட் டுள்ளது. இதற்கு மாநில அரசும் நிதி ஒதுக்க வேண்டும். அதன் பின்னர் திட்டம் செயல்படுத்தப்படும். முதல்– அமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று பிரதமர் நரேந்திரமோடியை சந்திக்க உள்ளார். அப்போது நானும் டெல்லி சென்று முதல்– அமைச்சரை சந்திப்பேன். அவரிடம் இப்பிரச்சினைகள் குறித்து பேசுவேன்.

குமரி மாவட்ட மக்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இனயம் (குளச் சல்) துறைமுக திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதனை தடுக்க சதி செய் கிறார்கள். இனயத்தில் அமைய இருப்பது வர்த்தக துறைமுகம் இல்லை. அது ஒரு சரக்குபெட்டகம் என்று சொல்லி வருகிறார்கள். ஆனால் மக்கள் ஒன்றை தெரிந்துகொள்ள வேண்டும். வர்த்தக துறைமுகத்தின் மறுபெயர்தான் சரக்கு பெட்டகம். எனவே இனயத்தில் துறைமுகம் கட்டாயம் கொண்டு வரப்படும்.

குமரி மாவட்டத்துக்கு ரூ.40 ஆயிரம் கோடிக்கான திட்டங்களை மத்திய அரசு கொடுத்துள்ளது. இதை ரூ.50 ஆயிரம் கோடிக்கு கொண்டு வர முயற்சி செய்து வருகிறோம். இவ்வாறு மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார். 

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. நாஞ்சில் வின்சென்ட், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் முகம்மது இஸ்மாயில், ஜான் ஜேக்கப், பாரதீய ஜனதா மாவட்ட தலைவர் முத்து கிருஷ்ணன், நாகர்கோவில் நகரசபை முன்னாள் தலைவர் மீனா தேவ், மாவட்ட பார்வையாளர் தேவ், நகர தலைவர் ராஜன், பொதுச் செயலாளர் அஜித், கண் காணிப்பு பொறியாளர் (நெடுஞ்சாலைதுறை) இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News