கன்னியாகுமரி ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் ராயப்பன் (வயது 45). இவர், சவுதி அரேபியாவில் தங்கி இருந்து மீன்பிடி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் அவர் மற்ற மீனவர்களுடன் கடலுக்கு மீன்பிடிக்க சென்றார்.
அப்போது படகில் உள்ள கயிறு அவரது காலில் சிக்கி கடலில் தவறி விழுந்து ராயப்பன் இறந்தார். இதுபற்றி தகவல் அவரது குடும்பத்தினருக்கு தெரிவிக்கப்பட்டது. மேலும் அவர் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tags:
District News