ஒகி புயலின் போது தென்னை மரம் விழுந்து காயமடைந்த பெண் மரணம்

குமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள பூச்சிவிளாகம் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். அரசு பஸ் டிரைவர். இவரது மனைவி ராஜசுலோச்சனா(வயது 43). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் 30–ம் தேதி ஒகி புயல் வீசிய போது, ராஜசுலோச்சனா தனது வீட்டின் அருகே தென்னந்தோப்பில் கட்டியிருந்த பசுமாட்டை அவிழ்க்க சென்றார். அப்போது, ஒரு தென்னை முறிந்து அவர் மீது விழுந்தது. இதில் அவரது பின்தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உடனே, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் ராஜசுலோச்சனாவின் உடல் நிலை மோசமானது. இதையடுத்து அவரை மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் ஒரு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர், அங்கிருந்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ராஜாக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Post a Comment

Previous News Next News