மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்படி பகுதியில் குளத்தின் அருகே புதரில் சிதைந்து போன சாக்கு மூடை கிடந்தது. அதில் சிமெண்டால் ஆன சுடலைமாடசாமி சிலை, அம்மன் சிலை மற்றும் பித்தளையால் ஆன சூலாயுதம், பித்தளை விளக்கு, இரும்பு வாள், வெட்டு கத்தி ஆகியன இருந்தன.
இதுகுறித்து வெள்ளிச்சந்தை கிராம நிர்வாக அதிகாரி தங்கத்துரை மணவாளக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துராமன் குளக்கரைக்கு சென்று விசாரணை நடத்தினார். பின்னர் அந்த சாமி சிலைகளை மீட்டு கல்குளம் தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைத்தார்.
Tags:
Surrounded Area