மத்திய அரசு 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்ததால் பொது மக்கள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். மத்திய அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்தும், அதை உடனே வாபஸ் பெறக்கோரியும் கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி இளைஞர் காங்கிரஸ் சார்பில் குளச்சல் முதல் வேர்கிளம்பி வரை நடைபயணம் நடந்தது.
இதன் தொடக்க நிகழ்ச்சி குளச்சல் காமராஜர் பஸ் நிலையம் முன்பு நடந்தது. கன்னியாகுமரி தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். இளைஞர் காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் ஆஸ்கர்பிரடி, செல்வகுமார், தொகுதி தலைவர்கள் சுமன், ராஜேஷ் ராபர்ட் உள்பட பலர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் வசந்தகுமார், பிரின்ஸ், ராஜேஷ்குமார், மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் விஜய் இளம்செழியன், கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா, மேற்கு மாவட்ட தலைவர் அசோகன் சாலமன் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நடை பயணத்தை அகில இந்திய பொதுச்செயலாளர் ஷாபி பரம்பில் எம்.எல்.ஏ. கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இதில் மாவட்ட செயலாளர் மகேஷ் லாசர், காங்கிரஸ் நிர்வாகிகள் ராதா கிருஷ்ணன், யூசுப்கான், மனோகரசிங் உள்பட பலர் கலந்து கொண்டனர். நடை பயணத்தின் போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப் பப்பட்டது.
Tags:
Surrounded Area