குமரி மாவட்ட கலெக்டர் சஜ்ஜன்சிங் சவான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தேரோட்ட விழாவை முன்னிட்டு வருகிற பிப்ரவரி மாதம் 9-ம் தேதி (வியாழக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.
9-ம் தேதி அன்று அறிவிக்கப்பட்டுள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக வருகிற மார்ச் மாதம் 11-ம் தேதி (2-வது சனிக்கிழமை) அன்று குமரி மாவட்டத்தில் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.
வருகிற 9-ம் தேதி அன்று குமரி மாவட்டத்தில் தலைமைக் கருவூலம் மற்றும் கிளைக்கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என இதன்மூலம் ஆணையிடப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
District News