குளச்சல் புனித காணிக்கை அன்னை ஆலய விழா நேற்று மாலை கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. இதனை முன்னிட்டு நேற்று காலை பங்கு உருவாக்க உழைத்த பெரியோர்களுக்கான நினைவு திருப்பலி நடந்தது. மாலை 5.45 மணியளவில் மறை மாவட்ட முதன்மை செயலர் பெலிக்ஸ் தலைமையில் ஜெபமாலை, திருக்கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடந்தது. இதில் கன்னியாகுமரி மறைவட்ட முதல்வர் நசரேன் மறையுரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிகளில் பங்கு மக்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர். இரவு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
2-ம் நாள் முதல் 8-ம் நாள் வரை தினமும் மாலை ஜெபமாலை, நவநாள், திருப்பலி மற்றும் இரவு கலை நிகழ்ச்சிகள் நடக்கி றது. 3-ம் நாள் காலை 5 மணிக்கு திருப்பலி, 7 மணிக்கு முதல் திருவிருந்து திருப்பலி, 7-ம் நாள் காலை 7 மணிக்கு புனித காணிக்கை அன்னை திருவிழா திருப்பலி, 9 மணி முதல் மாலை 4 மணி வரை நற்கருணை ஆராதனை, மாலை 6 மணியளவில் தூயமரியன்னை மேல்நிலைப் பள்ளி வளாகத்திலிருந்து புனித காணிக்கை அன்னை திருவுருவப்பவனி, தொடர்ந்து மதுரை உயர் மறை மாவட்ட அருள் பணி தேவதாஸ் தலைமையில் திருப்பலி நடக்கிறது. அம்மாண்டிவிளை ஜாண்ஸ் கல்லூரி செயலர் சாம்மேத்யூ மறையுரை ஆற்றுகிறார்.
9-ம் நாள் காலை 7 மணிக்கு நோயாளிக்களுக்கான திருப்பலி, மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, நவநாள், மாலை ஆராதனை, 10-ம் நாள் காலை 5 மணிக்கு திருப்பலி, 8 மணிக்கு ஆடம்பர திருவிழா திருப்பலி நடக்கிறது. இதில் அருட் பணி தேவதாஸ் தலைமையில் சரல் பங்குத்தந்தை உபால்டு மறையுரை ஆற்றுகிறார். இரவு இன்னிசை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை பங்கு மக்கள், பங்கு நிர்வாகிகள், அருட் சகோதரிகள், திருத்தொண்டர், பங்குத்தந்தையர்கள் செய்து வருகின்றனர்.
Tags:
Surrounded Area