இனயம் வர்த்தக துறைமுகத்துக்கு எதிர்ப்பு: பொதுமக்கள் உண்ணாவிரதம்

குமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் அருகே இனயம் பகுதியில் வர்த்தக துறைமுகம் அமைக்க மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. இங்கு துறைமுகம் அமையும் பட்சத்தில் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என அந்த பகுதி மீனவர்கள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், கறுப்பு கொடிகட்டி போராட்டம் உள்பட பல கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டன.

இந்நிலையில், வர்த்தக துறைமுகம் திட்டத்தை கைவிடகோரி கருங்கல் அருகே குற்றிப்பாறவிளை சந்திப்பில் நேற்று பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜேசையா, சட்ட ஆலோசகர் ஸ்டான்லி காஸ்மிக் சுந்தர், இணை ஒருங்கிணைப்பாளர் பெர்லின், அருட்பணியாளர்கள் அன்பரசன், அருள் ஜோசப், ஸ்டீபன், போதகர் ராஜையா ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

போராட்டத்தில், கானாவூர், இடைக்கோடு, பிச்சவிளை, காட்டுவிளை, பருத்திவிளை, எள்ளுவிளை, சடையன்விளை போன்ற பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News