500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் இருந்து ஏழை, எளிய, நடுத்தர மக்களை பாதுகாக்கக்கோரியும், மத்திய அரசின் அறிவிப்பை கண்டித்தும் நேற்று நாகர்கோவில் வடசேரி டிஸ்டில்லரி ரோட்டில் உள்ள ஸ்டேட் வங்கி முன் ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தலைவர் கண்ணாட்டுவிளை பாலையா தலைமை தாங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன், நிர்வாகிகள் காலபெருமாள், சபின், குமரி முருகேசன், வின்ஸ் ஆன்றோ, சிவகுமார், ஜெகன், மகேஷ் லாசர் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:
District News