மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புதிய கொடிமரம் சிறப்பு பூஜை: பச்சைமால் எம்எல்ஏ கலந்து கொண்டார்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் புதிய கொடிமரம் சிறப்பு பூஜை: பச்சைமால் எம்எல்ஏ கலந்து கொண்டார்
13-05-2015
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நுழைவாயில் புதிய பொலிவுடன் கட்டப்பட்டு வருகிறது. புதிய கொடிமரமும் அமைக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து கொடி மரம் பூஜை செய்யப்பட்டு, மரம் முழுவதும் எண்ணெய் பூசப்பட்டது. இதில் கோவில் குருக்கள், நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் பச்சைமால் எம்எல்ஏ கலந்து கொண்டு கொடிமரத்திற்கு எண்ணெய் பூசினார். மேலும் பச்சைமால் மனைவி செல்வ அழகி, அதிமுக குமரி மாவட்ட அவைத்தலைவர் சதாசிவம், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலளார் சிவசெல்வராஜ், பால்வள தலைவர் அசோகன், ஒன்றிய தலைவர் அசோக்குமார் உள்பட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News