ஜெயலலிதா விடுதலை: மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜை
12-05-2015
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா சொத்துகுவிப்பு வழக்கில் இருந்து நேற்று விடுதலையானார். இதை கொண்டாடும் விதமாக குமரி மாவட்டம் முழுவதும் அதிமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இன்று மதியம் சிறப்பு பூஜையும், தேங்காய் உடைத்து வழிபாடும் நடத்தினர். இதற்கு பச்சைமால் எம்எல்ஏ தலைமை தாங்கினார். அவைத்தலைவர் சதாசிவம், முன்னாள் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவசெல்வராஜன், முன்னாள் மேற்கு மாவட்ட செயலாளர் ஜாண்தங்கம், பால்வள தலைவர் அசோகன், ஒன்றியத் தலைவர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்