நாகர்கோவிலில், வருகிற 29-ம் தேதி உள்நாட்டு மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

நாகர்கோவிலில், வருகிற 29-ம் தேதி உள்நாட்டு மீனவர்கள் குடும்பத்துடன் பங்கேற்கும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
13-05-2015
குமரி மாவட்ட மீன் தொழிலாளர் சங்க (சி.ஐ.டி.யூ.) கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. கூட்டத்துக்கு அஸ்வின் வினோ தலைமை தாங்கினார். தமிழ்நாடு மீன்பிடி தொழிற்சங்க கூட்டமைப்பு (சி.ஐ.டி.யூ.) செலஸ்டின் சிறப்புரையாற்றினார். சங்க மாவட்ட பொதுச்செயலாளர் அந்தோணி, நிர்வாகி மரிய ஜார்ஜ், உள்நாட்டு மீனவர் சங்க பிரதிநிதிகள் ஆறுமுகம், பிரான்சிஸ், ஆல்பின், ஊர் தலைவர்கள் டென்னிஸ், வஸ்தியான், இசக்கிமுத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:-
மீன்துறை சிபாரிசு அடிப்படையில் வருவாய்த்துறை வழியாக இதுவரை பெற்று வந்த மீன்பாசி குத்தகையை தொடர்ந்து வழங்கவும், பொதுப்பணித்துறை மூலம் பொதுஏலம் விடும் அரசாணையை ரத்து செய்ய அரசை வலியுறுத்தும் வகையில் வருகிற 29-ம் தேதி கலெக்டரிடம் உள்நாட்டு மீனவர்கள் குடும்பத்துடன் சென்று மனு கொடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

Previous News Next News