நாகர்கோவிலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடந்தது

நாகர்கோவிலில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் மக்கள் சங்கமம் மாநாடு நடந்தது
13-05-2015
பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் கோட்டார் பகுதி சார்பில் மக்கள் சங்கமம் 2 நாள் மாநாடு இளங்கடை பாவாகாசீம் நினைவுத்திடலில் தொடங்கியது. முதல் நாளில் மாநாட்டை பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மாவட்ட தலைவர் மாகீன் கொடியேற்றி தொடங்கி வைத்தார். அதைத் தொடர்ந்து மர்ஹூம் பாபு சாகிப் ஆலிம் நினைவுத்திடலில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சியை சலீம் அல்லாமா தொடங்கி வைத்தார். 2-வது நாள் மாலையில் மாநாடு பொதுக்கூட்டம் மற்றும் மாநாட்டின் இடையே நடந்த விளையாட்டு, கலாசார போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
பொதுக்கூட்டத்துக்கு கோட்டார் பகுதி தலைவர் இப்ராகிம் தலைமை தாங்கினார். மாவட்ட ஊடக தொடர்பாளர் செய்யது இஸ்ஹாக் வரவேற்று பேசினார். மாவட்ட தலைவர் மாகீன் தொடக்க உரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்ட தலைவர் சுல்பிக்கர் அலி, பொதுச்செயலாளர் நூஹ், மாவட்ட செயலாளர் பிர்தவுஸ், நகர தலைவர் உபேஸ் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சிறப்பு அழைப்பாளர்களான நிர்வாகிகள் ரூஹூல்ஹக், இஸ்மாயில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்கேற்ப விரிவாக்க பணிகளை தென்னக ரெயில்வே உடனே செய்ய வேண்டும், அரசுப்பள்ளிகளை தரம் உயர்த்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Post a Comment

Previous News Next News