குமரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது
06-05-2015
குமரி மாவட்ட பேரூராட்சி ஊழியர்கள் சங்கம் சார்பில் 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்து, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று மாலை 5.45 மணி அளவில் நாகர்கோவில் பேரூராட்சி உதவி இயக்குநர் அலுவலகம் எதிரில் நடந்தது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ரெஜிஜெபக்குமார் தலைமை தாங்கினார். லீடன்ஸ்டோன் துவக்கவுரை வழங்கினார். மாநில பொதுச் செயலாளர் கனகராஜ் விளக்கவுரையும், மாநில இணை செயலாளர் சுமதி, ஜான்ராஜ் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கினர். மாவட்ட செயலாளர் சந்திரன் நன்றியுரை வழங்கினார்.
ஆர்ப்பாட்டத்தில் காலியிடங்கள் நிரப்பவும், பதவி உயர்வு வழங்கிடவும், கணினி இயக்குபவர்களுக்கு தொகுப்பூதியம் வழங்கிடவும், பேரூராட்சிகளுக்கு இணையாக வருமானம் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தரம் உயர்த்தவும் உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைளை பற்றி கோஷம் எழுப்பப்பட்டன.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்