மணவாளக்குறிச்சி, கல்லடிவிளை அருள்மிகு ஸ்ரீஆற்றுமாடன் தம்புரான் திருக்கோவில் திருவிழா
04-05-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள கல்லடிவிளை அருள்மிகு ஸ்ரீஆற்றுமாடன் தம்புரான் திருக்கோவில் திருவிழா 5-ம் தேதி தொடங்கி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாள் திருவிழாவான 5-ம் தேதி காலை 4.30 மணிக்கு சுப்ரபாதம், காலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு மாவட்ட அளவிலான கைபந்து போட்டி, காலை 9 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டி போட்டிகள், மாலை 6 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 8 மணிக்கு பக்திகான சபா ஆகியவை நடைபெறுகிறது.
6-ம் தேதி விழாவில் காலை 5 மங்கள இசை, காலை 8 இறுதி கைபந்து போட்டி, காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவ, மாணவியருக்கான பேச்சுபோட்டி மற்றும் பாட்டு போட்டிகள், மாலை 5 மணிக்கு பக்தி கானங்கள், மாலை 6.30 இசைத்தட்டு, இரவு 9 மணிக்கு அமிர்தா டிவி புகழ் கவிஞர் சாய்பாபு வழங்கும் பஞ்சமி ஆர்க்கெஸ்ட்ராவின் “திரைப்பட மெல்லிசை விருந்து” நடைபெறுகிறது.
7-ம் தேதி திருவிழாவில் காலை 5 மணிக்கு மங்கள இசை, மாலை 7 மணிக்கு பக்தி கானங்கள், மதியம் 12 மணிக்கு கேரளபுகழ் செண்டைமேளம், மதியம் 12.30 மணிக்கு தப்பாட்டம், மதியம் 12.45 மணிக்கு சிங்காரி மேளம், மாலை 3.30 மணிக்கு சேரமங்கலம் தென்திருவரங்கத்து ஸ்ரீஆழ்வார் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுட பவனி, ஆற்றுமாடன் கோவிலுக்கு வருதல், இரவு 9 மணிக்கு வில்லிசை, இரவு 12 மணிக்கு தீபாராதனை ஆகியன நடைபெறுகிறது.
8-ம் தேதி திருவிழாவில் காலை 8.30 மணிக்கு செண்டைமேளம், காலை 9.30 வில்லிசை, காலை 11 மணிக்கு தீபாராதனை, மதியம் 12.30 மணிக்கு அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு, மதியம் 1 மணிக்கு மாபெரும் சமபந்தி விருந்து, மாலை 6 மணிக்கு வில்லிசை, இரவு 7 மணிக்கு பரிசு வழங்குதல், இரவு 10 ஸ்ரீதம்புரான் பாட்டு வில்லிசை ஆகியன நடக்கிறது.
9-ம் தேதி விழாவில் காலை 5 மணிக்கு மங்கள இசை, காலை 8அம்மனுக்கு பொங்கல் வழிபாடு, காலை 9.30 மணிக்கு ஸ்ரீதம்புரான்மார்கள் சரித்திர கதை, காலை 10 மணிக்கு வில்லிசை, காலை 11 மணிக்கு ஸ்ரீதம்புரான்மார்களுக்கு பூபடைப்பு, மதியம் 12.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சிகளை விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்