மணவாளக்குறிச்சி, சேரமங்கலம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் மேதின விழா
03-05-2015
மணவாளக்குறிச்சி அருகே உள்ள சேரமங்கலம் நேதாஜி இளைஞர் மன்றம் சார்பில் 25-வது ஆண்டு வெள்ளி விழா மற்றும் மே தின விழா ஏப்ரல் 30 மற்றும் மே 1-ம் தேதி ஆகிய இரு நாட்கள் கொண்டாடப்பட்டது. 30-ம் தேதி நடைபெற்ற விழாவில் காலை 5.30 மணிக்கு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதனை மன்ற பொருளாளர் மரிய சுரேஷ் தொடங்கி வைத்தார். காலை 9 மணிக்கு டாக்டர் றோசித்தா கிறிஸ்டோபர் கொடியேற்றினார்.
காலை 10 மணிக்கு இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 5 மணிக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சியும், இரவு 7 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும், இரவு 9 மாறுவேட போட்டியும் நடைபெற்றது.
மே 1-ம் தேதி காலை 8.30 மணிக்கு குருந்தன்கோடு வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரதீப் குமார் தேசிய கொடியேற்றினார். காலை 9 மணிக்கு சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டு போட்டிகளும், மாலை 3.30 மணிக்கு பேச்சு மற்றும் பாட்டு போட்டிகளும் நடைபெற்றன. மாலை 5.30 மணிக்கு வடம் இழுத்தல் போட்டியும், மாலை 6 மணிக்கு பொதுக்கூட்டமும், நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு மன்ற தலைவர் ஜெகதீஷ் தலைமை தாங்கினார்.
இரவு 9 மணிக்கு திருவனந்தபுரம் வருண் பெருமையுடன் வழங்கிய நியு சிங்கிங் பேட்ஸ் இசைக்குழுவின் இன்னிசை கச்சேரி நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிகளை மன்ற விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
பிரபு மற்றும் ராஜா ஜஸ்டஸ்
சேரமங்கலம், மணவாளக்குறிச்சி
Tags:
சுற்றுவட்டார செய்திகள்