தக்கலை, ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு ஆண்டு விழா: ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நாளை நடக்கிறது
02-05-2015
18 ஆயிரம் பாடல்களை இயற்றி இஸ்லாமிய இலக்கியத்தின் சிறப்பை உலகுக்கு உயர்த்தியவர் ஞானமாமேதை ஷெய்கு பீர்முகமது சாகிபு. இவரது ஆண்டுவிழா வருடம் தோறும் மிக சிறப்பாக தக்கலை அஞ்சுவன்னம் பீர்முஹம்மதியா முஸ்லிம் அசோசியேஷன் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு விழா கடந்த 20-ம் தேதி தொடங்கியது.
மே 6-ம் தேதி வரை விழா நடைபெறுகிறது. இதில் முக்கிய நிகழ்வான புகழ்பெற்ற ஞானப்புகழ்ச்சி பாடுதல் நிகழ்ச்சி நாளை (ஞாயிற்றுக்கிழமை) இரவு 9 மணிக்கு தொடங்கி 4- ம் தேதி அதிகாலை வரை நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். 4- ம் தேதி மாலை நேர்ச்சை வழங்குதல் நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி 4- ம் தேதி குமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்பாடுகளை தக்கலை அஞ்சுவன்னம் பீர் முகம்மதியா முஸ்லிம் அசோஷியேசன் ஜமாஅத் தலைவர் முகம்மது ஹைதர் அலி மற்றும் ஜமாத் நிர்வாகிகள், விழாக்குழு நிர்வாகிகள் செய்துள்ளனர்.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்