மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 70 பேர் கைது

மணவாளக்குறிச்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 70 பேர் கைது
13-01-2015
குருந்தன்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் மதமோதல்களை ஏற்படுத்தும் விதத்தில் செயல்பட்டு வரும் இந்து முன்னணி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கேட்டு குருந்தன்கோடு மேற்கு வட்டார காங்கிரஸ் சார்பில் மணவாளக்குறிச்சி சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் சேவியர் சுந்தர்ராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட பொதுச்செயலாளர் ஜாண்சவுந்தர் முன்னிலை வகித்தார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ., கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராபர்ட் புரூஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மணவாளக்குறிச்சி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்களை கைது செய்தார்.
இதில் பிரின்ஸ் எம்.எல்.ஏ. உள்பட 70 பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அனைவரும் அங்குள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். அதனைத் தொடர்ந்து மாலையில் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.

Post a Comment

Previous News Next News