மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் சுவரொட்டி ஒட்டிய 14 பேர் மீது வழக்கு

மணவாளக்குறிச்சி பள்ளிவாசலில் சுவரொட்டி ஒட்டிய 14 பேர் மீது வழக்கு
10-01-2014
மணவாளக்குறிச்சி பீச்ரோட்டில் உள்ள பள்ளிவாசலில் உள்ளே சிலர் நுழைந்து நிர்வாக அறிவிப்பு பலகையிலும், சுற்றுசுவரிலும் பிரச்சினைக்குரிய வாசகம் எழுதிய சுவரொட்டியை ஒட்டியதாக தெரிகிறது. அப்போது பள்ளிவாசலில் இருந்து சிலர் வெளியே வருவதை பார்த்ததும், சுவரொட்டியை ஒட்டியவர்கள் உடனே அங்கிருந்து சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

இதுபற்றி மணவாளக்குறிச்சி போலீசில் முஸ்லிம் முஹல்ல தலைவர் பஷீர் புகார் செய்தார். அதன்பேரில் தேங்காய்கூட்டுவிளை பகுதியை சேர்ந்த 4 பேரும், மற்றும் கண்டால் தெரியும் 10 பேரும் என மொத்தம் 14 பேர் மீது சப் இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்குபதிவு செய்துள்ளார். இன்ஸ்பெக்டர் ஆதிலிங்கபோஸ் விசாரணை நடத்தி வருகிறார்.
Thanks to Dailythanthi

Post a Comment

Previous News Next News