குமரி ரப்பர் கழக நிலத்தை அரசு மீட்க வேண்டும்: பிரின்ஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை
13-01-2015
குமரி ரப்பர் கழகத்திற்கு சொந்தமான நிலத்தை, தமிழக அரசு மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரின்ஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
குமரி மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பெருந்தலைவர் காமராஜரால் தமிழ்நாடு அரசு ரப்பர் கழகம் தொடங்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் வேலை பார்த்து வந்தனர். இதனால் அரசுக்கு வருவாயும் கிடைத்தது. பின்னர் அரசு ரப்பர் கழகத்தை சரியாக பராமரித்து அதை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்நிலையில் கடந்த ஆண்டு தொழிலாளர்களின் கருத்தை கேட்காமல் சிற்றார், மருதம்பாறை, மணலோடை போன்ற பகுதிகளை சார்ந்த 108 ஹெக்டேர் நிலத்தை வனத்துறைக்கு தமிழக அரசு கொடுத்துள்ளது. இதனால் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்ததோடு, அவர்கள் குடும்பமும் வறுமையில் வாடுகிறது.
எனவே அரசு உடனடியாக 108 ஹெக்டேர் நிலத்தையும் மீட்க வேண்டும். அரசால் இந்த நிலத்தை பராமரிக்க முடியாவிட்டால், வேலையில்லாமல் இருக்கும் ஆயிரக்கணக்கான தொழி லாளர்களுக்கு அந்த இடத்தை குத்தகைக்கு கொடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டும். அல்லது ரப்பர் தொழிற்சாலை அமைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். இல்லை யென்றால் அந்த இடத்தை ரப்பர் கழகமே பராமரித்து தொழி லாளர்களுக்கு வேலை வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:
குமரிமாவட்ட செய்திகள்