மணவாளக்குறிச்சி – தக்கலை அரசு பேருந்து பள்ளத்தில் இறங்கியது
23-12-2014
மணவாளக்குறிச்சியில் இருந்து தக்கலைக்கு மாங்குழி, திங்கள்நகர் வழியாக சில அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்துகளில் ஒரு பேருந்து மட்டும், தலக்குளம் வழியாக திங்கள்நகர் சென்று, பின்னர் தக்கலை செல்கிறது. இந்த பேருந்துகளில் தினமும் ஏராளமான பயணிகள் பயணம் செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு தக்கலையில் இருந்து திங்கள்நகர், தலக்குளம் ஆறுமுகம் ஆஸ்பத்திரி வழியாக மணவாளக்குறிச்சிக்கு பேருந்து ஒன்று வந்துகொண்டிருந்தது. அப்போது பேருந்தில் பயணிகள் பலர் பயணம் செய்துகொண்டு வந்தனர். அப்பகுதியில் உள்ள சாலை மிகவும் மோசமாகதாக காணப்படுகிறது. மேலும் சாலையும் மிகக்குறுகலாக உள்ளது.
அப்போது பேருந்து ஓட்டுனர் வேறொரு வாகனத்திற்கு வழிவிடுவதற்காக ரோட்டோரத்தில் பேருந்தை நகர்த்திபோது, பேருந்து அருகில் இருந்த பள்ளத்தில் இறங்கியதாக தெரிகிறது. இதனால் பேருந்தில் பயணம் செய்த பயணிகள் அச்சத்துடன் காணப்பட்டனர். எனினும் அதிர்ஷ்டவசமாக பயணிகள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டதாக கூறப்படுகிறது.
செய்தி மற்றும் போட்டோஸ்
அமல்ராஜ் செல்வா
படர்நிலம், மணவாளக்குறிச்சி
Tags:
சுற்றுவட்டார செய்திகள்