மணவாளக்குறிச்சி, தருவை ஸ்ரீநடேசர் ஆலயத்தில் பஜனை பட்டாபிஷேக விழா நடைபெற்றது
21-12-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள தருவை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீநடேசர் ஆலயத்தில் நேற்று பஜனை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடந்தது. கார்த்திகை மாதம் துவங்கியதை தொடர்ந்து மாலை அணிவித்த பக்தர்கள் விரதம் இருந்து, தினமும் மணவாளக்குறிச்சி பகுதிகளில் பஜனை பாடி வந்தனர்.
இதை தொடர்ந்து நேற்று இரவு பஜனை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவிலில் வைத்து சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து மணவாளக்குறிச்சி பகுதிகளில், நையாண்டி மேளத்தாளத்துடன் பஜனைக் குழுவினர், அனுமன் வேடம் அணிந்த பக்தர் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் தருவை, ஆசாரிதெரு, பிள்ளையார்கோவில் போன்ற பகுதிகளில் ஊர்வலமாக சென்றனர்.
நேற்று இரவு புறப்பட்ட ஊர்வலம் இன்று அதிகாலை வரையிலும் நடந்தது. தொடர்ந்து கோவில் சென்றடைந்து அங்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
செய்தி மற்றும் போட்டோஸ்
புதியபுயல் முருகன்
Tags:
Manavai News