கருங்கல் பகுதியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ஊர்வலம்
23-12-2014
டிசம்பர் 25-ம் தேதி உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் கிறிஸ்துமஸ் கொண்டாட களைகட்டி வருகிறது. கிறிஸ்தவ ஆலயங்களிலும், வீடுகளில் அலங்கார வண்ண விளக்குகளும், ஸ்டார்களும் பொருத்தப்பட்டுள்ளது. அவை கண்ணைக்கவரும் வகையில் காணப்படுகின்றன.
குமரி மாவட்டத்தில் கருங்கல் மற்றும் பாலப்பள்ளம் பகுதிகளில் லட்சகணக்கில் செலவு செய்து குடில் அமைத்து பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட உள்ளது. கருங்கல் பகுதியில் உள்ள சர்ச்சில் இருந்து நேற்று முன்தினம் ஏராளமான கிறிஸ்துமஸ் தாத்தாக்கள் ரோட்டில் ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
மேலும், ஊர்வலத்தில் செண்டை மேளத்துடன், யானையும் வரவழைக்கப்பட்டு இருந்தது. கிறிஸ்தவ மெல்லிசை பாடல் குழுவினர் வாகனத்தில் இருந்து பாட்டுப்பாடி சென்றனர். பல்வேறு கலைநிகழ்ச்சிகளை ஊர்வலத்தில் செய்தவண்ணம் சென்றனர். ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.
செய்தி மற்றும் போட்டோஸ்
அமலராஜ் செல்வா
படர்நிலம், மணவாளக்குறிச்சி
Tags:
குமரிமாவட்ட செய்திகள்