மரண அறிவிப்பு: மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளையை சேர்ந்த பெண் மரணம்
27-12-2014
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள காந்தாரிவிளையை சேர்ந்தவர் அப்துல் ரஷீத். இவர், குடும்பத்துடன் நாகர்கோவில், கோட்டாரில் வசித்துவந்தார். இவரது மனைவி ஹபீபா பீவி (வயது 50). இவர் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் இன்று அதிகாலை 1.30 மணி அளவில் நாகர்கோவில், கோட்டாரில் வைத்து மரணம் அடைந்தார். அன்னாரது உடல் இன்று காலை 7 மணி அளவில் சொந்த ஊரான மணவாளக்குறிச்சி, காந்தாரிவிளைக்கு கொண்டுவரப்பட்டது.
அவரது உடல், இன்று மாலை மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல மையவாளியில் வைத்து நல்லடக்கம் செய்யப்படுகிறது. அப்துல் ரஷீத் தம்பதியினருக்கு இசத் மற்றும் மசூத் ஆகிய இரு மகன்கள் உள்ளனர்.
Tags:
Announcements




May Her soul rest in peace ... !Our deepest condolence to the family....!
ReplyDelete