மணவாளக்குறிச்சி, சின்னவிளை கடற்கரையில் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு குவித்த மக்கள்
26-12-2014
மணவாளக்குறிச்சி பகுதியில் உள்ள சின்னவிளை கடற்கரையில் நேற்று கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி மக்கள் அதிக அளவில் குவிந்தனர். சின்னவிளை கடற்கரையில் நேற்று காலையில் இருந்து மக்கள் வரத்தொடங்கினர். தொடர்ந்து செண்டை மேளங்கள் முழங்க, இளைஞர்களின் ஆட்டங்கள் துவங்கியது.
கடலில் படகு மற்றும் வள்ளங்களில் மக்கள் குடும்பம், குடும்பமாக கடலில் வலம் வந்தனர். படகுகளில் ஸ்பீக்கர்களில் பாடல்கள் ஒலிக்கசெய்து, நண்பர் குழுவினர் கடலில் சென்றனர். தொடர்ந்து மக்கள் கும்பல், கும்பலாக வந்து கொண்டிருந்தனர்.
மணவாளக்குறிச்சி பகுதி மக்கள் மட்டுமின்றி பக்கத்து ஊரைசேர்ந்த மக்களும் கடற்கரையில் குவிந்தனர். மதியத்திற்கு மேல் கடற்கரை தெரியாத அளவுக்கு மக்கள் தலைகளாக காட்சியளித்தது. கடலில் இறங்கி பெரும்பாலானோர் குளித்தனர். சின்னவிளை இளைஞர்கள் கடலில் உள்பகுதிக்கு குளிப்பவர்கள் செல்லாமல் இருக்க கயிறு கட்டி பாதுகாப்பு செய்திருந்தனர்.
கடற்கரையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்ட சிறப்பு ஏற்பாடுகளை சின்னவிளை “டி.எக்ஸ்” குழுவினரும், “ஸீ.ஸ்டார்” குழுவினரும் செய்திருந்தனர். காலை முதல் துவங்கிய ஆட்டம், கொண்டாட்டம் மாலை 6 மணி வரை நீடித்தது.
Tags:
Manavai News