மணவாளக்குறிச்சி, சின்னவிளை மீனவர்கள் வலைகளில் சிக்கிய “முரல்” மீன்கள்: குவியல், குவியலாக கிடைத்தன

மணவாளக்குறிச்சி, சின்னவிளை மீனவர்கள் வலைகளில் சிக்கிய “முரல்” மீன்கள்: குவியல், குவியலாக கிடைத்தன
17-12-2014
மணவாளக்குறிச்சி அருகில் உள்ள மீனவ கிராமம் சின்னவிளை. இங்கு சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட வள்ளம், கட்டுமரங்களில் மீனவர்கள் மீன்பிடிக்க செல்கிறார்கள். சாதாரணமாக குறைந்த அளவிலேயே மீன்கள், மீனவர் வலைகளில் கிடைப்பது வழக்கம். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஆஸ்டின் என்ற மீனவர் வலையில் ஏராளமான “வேளா, சூரை” மீன்கள் கிடைத்தன.
இந்நிலையில் நேற்று சின்னவிளை பகுதியில் இருந்து மீன்பிடித்து வந்த வள்ளங்களில் குவியல், குவியலாக “முரல்” மீன்கள் கிடைத்தன. மீன்கள் கடற்கரைக்கு கொண்டுவரப்பட்டு, வியாபாரிகளுக்கு விலை நிர்ணயம் செய்யப்பட்டது. பின்னர் வியாபாரிகள் பெரிய பிளாஸ்டிக் பெட்டிகளில் மீன்களை வைத்து வாகனங்களில் ஏற்றி சென்றனர்.
நேற்று மாலை முதல் வந்த மீன்கள், இரவு வரை கொண்டுவரப்பட்டு, வியாபாரிகள் வாங்கி சென்றனர். அதிகளவு மீன்கள் கிடைத்ததால், மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Post a Comment

Previous News Next News