மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல பொதுக்குழு கூட்டம் நடந்தது: புதிய நிர்வாகிகள் தேர்வு
14-12-2014
மணவாளக்குறிச்சி முஸ்லிம் முஹல்ல நிர்வாகிகள் தேர்வுக்கான பொதுக்குழு கூட்டம் இன்று காலை 9 மணி அளவில் துவங்கியது. இதில் முஹல்லத்தை சார்ந்தவர்கள் பெருமளவில் கலந்து கொண்டனர். புதிய நிர்வாகிகள் தேர்வு தமிழ்நாடு வஃக்ப் போர்டு சிறப்பு அதிகாரியின் முன்னிலையில் நடைபெற்றது.
பொதுக்குழு கூட்டம் துவங்கியதில் முதல் பல்வேறு கருத்துக்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 4 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்தின் முடிவில் புதிய நிர்வாகிகள் முஹல்லவாசிகளால் ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டது. நிர்வாகிகள் தேர்வு சுமார் 2 மணி அளவில் முடிந்தது.
அதன்படி, ஏற்கனவே முஹல்ல தலைவராக இருந்த ஹல்ஃபா பஷீர், மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத்தலைவராக இப்ராஹீம் பிள்ளை, செயலாளராக எஸ்.எம்.சுலைமான், இணைச்செயலாளராக முபீன், பொருளாளராக அஸ்கர், நிர்வாகக்குழு உறுப்பினர்களாக நஜீபு, அன்சாரி, ஹக்கீம், சலீம், முஹம்மது ஹனிபா மற்றும் காலித் ஆகியோர் தேர்ந்தடுக்கப்பட்டனர்.
Tags:
Manavai News