மணவாளக்குறிச்சி மகளிர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் இடமாற்றத்துக்கு எதிர்ப்பு: எம்.எல்.ஏ. தலைமையில் கலெக்டரிடம் மனு
11-11-2014
மணவாளக்குறிச்சியில் உள்ள கடியப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் பத்மநாபபுரம் தொகுதி எம்.எல்.ஏ. டாக்டர் புஷ்பலீலா ஆல்பன் தலைமையில் கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிறிஸ்டல் சாந்தகுமாரி, கவுன்சிலர் ஆலிவர் சேம்ராஜ், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி அய்யப்பன், மணவாளக்குறிச்சி பேரூராட்சி துணைத்தலைவர் குட்டிராஜன், புவனேந்திரன், தருவை அன்பு கண்ணன் உள்ளிட்டோர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று ஒரு மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:–
மணவாளக்குறிச்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் வில்வம். இவரை திடீரென பணியிட மாற்றம் செய்துள்ளனர். அவர் திறமையாக பணிபுரிந்து பள்ளியில் கல்வித்தரத்தை மேம்படுத்தியவர். அவர் இல்லாததால் மாணவ–மாணவிகளின் கல்வித்தரம் பாதிக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அவரை மீண்டும் மணவாளக்குறிச்சி பள்ளியில் பணியமர்த்த வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.
Tags:
Manavai News