மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்: இன்று வகுப்புகளுக்கு சென்றனர்

மணவாளக்குறிச்சி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் நேற்று வகுப்புகளை புறக்கணித்தனர்: இன்று வகுப்புகளுக்கு சென்றனர்
11-11-2014
மணவாளக்குறிச்சியில் உள்ள கடியப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வந்தவர் வில்வம். இவர் திடீரென இடமாற்றம் செய்யப்பட்டார். இவரை இடமாற்றம் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பள்ளி மாணவிகள் கடந்த வியாழக்கிழமை அன்று மாலையில் பள்ளியில் உள்ளிருப்பு போராட்டமும், வெள்ளியன்று முற்றுகை போராட்டமும், தொடர்ந்து சாலை மறியல் போராட்டமும் நடத்தினர்.
பின்னர் மாவட்ட கல்வி அதிகாரி ராதாகிருஷ்ணன் மற்றும் பத்மநாபபுரம் கோட்டாட்சியாளர் அருண் சத்யா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுகுறித்து நேற்று (திங்கட்கிழமை) அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனால் மாணவிகள் கலைந்து சென்றனர். தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்கள் வந்தது.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் மாணவிகள் பள்ளிக்கு வந்தனர். அப்போது புதிய தலைமை ஆசிரியர் பதவியேற்ற தகவல் அறிந்ததும் மாணவிகள், வகுப்புகளை புறக்கணித்து விட்டு வீடுகளுக்கு சென்றனர். இன்று தங்களின் படிப்பை கருத்தில் கொண்டு வகுப்புகளுக்கு சென்றனர். பள்ளி வழக்கம் போல் செயல்படுகிறது.

Post a Comment

Previous News Next News