அம்மாண்டிவிளை சந்திப்பில் தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்
11-11-2014
பால்விலை உயர்வு, மின் கட்டண உயர்வு ஆகியவற்றை கண்டித்தும், பழுதடைந்துள்ள சாலைகளை செப்பனிட கேட்டும் தே.மு.தி.க. சார்பில் அம்மாண்டிவிளை சந்திப்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதற்கு ஒன்றிய கழக செயலாளர் புஷ்பராஜ் தலைமை தாங்கினார். பேரூர் செயலாளர் அசோக்குமார், ஒன்றிய கேப்டன் மன்ற செயலாளர் கிருஷ்ணன், இளைஞர் அணி செயலாளர் கிருஷ்ணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரி கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஜெகநாதன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார். இதில் சங்கர், ஜாண் ராஜேஷ், கண்ணன், கவாஸ்கர், ஜேம்ஸ் மார்ஷல், கிருஷ்ணராஜ், கலைமணி, சஜித் சுனில் குமார், ஜெஸ்ரின் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்