வெள்ளிச்சந்தை அருகே பெண் விஷம் குடித்து தற்கொலை
21-10-2014
வெள்ளிச்சந்தை அருகே உள்ள ஈசன்தங்கு பகுதியில் வசிப்பவர் சுயம்புலிங்கம், கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ராதாபாய் (வயது 45). சுயம்புலிங்கத்துக்கு மது அருந்தும் பழக்கம் இருந்து வந்ததாகவும், இதனால் அவர் வேலைக்கு சரிவர செல்வதில்லை என்றும் கூறப்படுகிறது. இதனால் ராதாபாய் வைராக்குடியிருப்பில் உள்ள தாய் வீட்டுக்கு சென்று விட்டார். உடனே சுயம்புலிங்கம் அங்கு சென்று, இனிமேல் மது அருந்த மாட்டேன் என்று கூறியதாகவும், அதைத்தொடர்ந்து ராதாபாய் மீண்டும் ஈசன்தங்குக்கு திரும்பி வந்தார்.
இந்நிலையில் சுயம்புலிங்கம் மீண்டும் மது அருந்திவிட்டு, வேலைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ராதாபாய் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். ஆபத்தான நிலையில் இருந்த அவரை நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ராதாபாய் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி வெள்ளிச்சந்தை போலீசில் சுயம்புலிங்கம் மகன் ராஜசுந்தர் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயந்தி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்