மணவாளக்குறிச்சி பகுதிகளில் அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிள்கள்: தாசில்தாரிடம் ஒப்படைப்பு

மணவாளக்குறிச்சி பகுதிகளில் அனாதையாக நின்ற மோட்டார் சைக்கிள்கள்: தாசில்தாரிடம் ஒப்படைப்பு
21-10-2014
சாலையோரம் பலநாட்களாக கேட்பாரற்று நிறுத்தியிருக்கும் மோட்டார் வாகனங்களை போலீசார் ரோந்து செல்லும்போது பறிமுதல் செய்வார்கள். பின்னர் அவற்றை போலீஸ் நிலையத்திற்கு போலீசார் எடுத்து வருவது வழக்கம். பின்னர் உரிமையாளர்கள் வாகனத்திற்கான ஆவணங்களை காண்பித்து பெற்றுக்கொள்வார்கள். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டு பல மாதங்கள் கடந்தும் எவரும் உரிமைகோராத வாகனங்களை போலீசார், தாசில்தாரிடம் ஒப்படைப்பார்கள்.
அந்த வாகனங்களை தாசில்தாரிடம் இருந்து பெற உரிமையாளர்கள் தகுந்த ஆவணங்களை காண்பித்தால் போதுமானது. அதன்படி, வெள்ளிச்சந்தை போலீஸ் நிலையத்தில் 4 மோட்டார் சைக்கிள்கள், மணவாளக்குறிச்சி போலீஸ் நிலையத்தில் இருந்து 17 மோட்டார் சைக்கிள்கள் தாசில்தாரிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Post a Comment

Previous News Next News