மண்டைக்காட்டில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்

மண்டைக்காட்டில் தே.மு.தி.க. கண்டன ஆர்ப்பாட்டம்
21-10-2014
மண்டைக்காடு அருகே மாதவிளையில் கிறிஸ்தவ கூட்டம் நடத்த எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மீது மண்டைக்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் தே.மு.தி.க. ஒன்றிய இளைஞரணி செயலாளர் கிருஷ்ணகுமாரும் உள்ளார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் மண்டைக்காட்டில் நடந்தது. பேரூர் செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் புஷ்பராஜ் முன்னிலை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர் ஜெகநாதன் போராட்டத்தை பற்றி விளக்கி பேசினார்.
நிகழ்ச்சியில், மாநில பேச்சாளர் செல்வக்குமார், மாவட்ட பொருளாளர் கவாஸ்கர், மாவட்ட துணைச் செயலாளர் ஜேம்ஸ் மாஸ்டர், ரத்தினசுவாமி, மாவட்ட பிரதிநிதி பாபு, ஒன்றிய துணைச் செயலாளர் சணல், பேரூர் இளைஞரணி செயலாளர் அருண்குமார் மற்றும் பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News