மணவாளக்குறிச்சி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது

மணவாளக்குறிச்சி அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரித்த 4 பேர் கைது
21-10-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள ஆறுதெங்கன்விளையில் ஒரு வீட்டில் அரசு அனுமதியின்றி பட்டாசுகள் தயாரிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

அதன்பேரில் நீண்டகரை ‘பி’ கிராம நிர்வாக அலுவலர் சரஸ்வதி மற்றும் ஊழியர்கள் நேற்று மாலை அந்த வீட்டில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு முத்துகிருஷ்ணன் (வயது 65), மாரி (60) ஆகியோர் உரிய அனுமதியில்லாமல் பட்டாசுகள் தயாரித்துக் கொண்டிருப்பது தெரியவந்தது. 
இதையடுத்து அங்கிருந்த 5மூட்டை பட்டாசுகளை பறிமுதல் செய்தனர். மேலும் முத்துகிருஷ்ணன், மாரி ஆகியோரை பிடித்து ராஜாக்கமங்கலம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் இருவரையும் கைது செய்தனர். இன்ஸ்பெக்டர் சுதாகர் விசாரணை நடத்தி வருகிறார்.

Post a Comment

Previous News Next News