மணவாளக்குறிச்சியில் மழை நீர் தேங்கி சாலை பழுதாவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு

மணவாளக்குறிச்சியில் மழை நீர் தேங்கி சாலை பழுதாவதை தடுக்க சிறப்பு ஏற்பாடு
21-10-2014
மணவாளக்குறிச்சி, தேங்காய்கூட்டுவிளை சந்திப்பு ரோட்டில் மழை காலங்களில் அதிகளவு மழை நீர் தேங்குவதால், ரோடு குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால் இப்பகுதி வழியே செல்லும் வாகனங்கள் தட்டுத்தடுமாறி செல்கின்றன. சிலவேளைகளில் குண்டும், குழியுமான சாலையில் மண் போட்டு நிரப்பப்படும். அடுத்த மழையில் மண் அரிக்கப்பட்டு, மீண்டும் பள்ளம் ஏற்படுகிறது.
எனவே, இதனை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலை துறையினர், ரோட்டில் மழை நீர் தேங்காமல் இருக்க, ரோட்டோரத்தில் தண்ணீர் செல்ல ஏதுவாக, தேங்காய்கூட்டுவிளை சந்திப்பு பகுதியில் இருந்து தருவை வரை ஓடை தோண்டப்பட்டு வருகிறது. இந்த ஓடை தருவை பகுதியில் உள்ள ஒரு தோப்பில் சென்று முடிவடைகிறது. இதனால் மழை நீர் ரோட்டில் தேங்குவது தடுக்கப்படும். இந்த தகவலை பணியினை மேற்கொள்ளும் மேற்பார்வையாளர் தெரிவித்தார்.

Post a Comment

Previous News Next News