மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்

மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் சமபந்தி விருந்து: திரளாக பக்தர்கள் கலந்து கொண்டனர்
17-08-2014
மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் சமபந்தி விருந்து நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், உதய மார்த்தாண்டன் பூஜையும், 6.30 மணிக்கு தீபாராதனையும் நடந்தது.
மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது. 1.30 மணிக்கு சமபந்தி விருந்து நடந்தது. இதில் குளச்சல் எம்.எல்.ஏ. பிரின்ஸ், மண்டைக்காடு பேரூராட்சி தலைவி மகேஸ்வரி முருகேசன், துணைத்தலைவர் ஜெகன் சந்திரகுமார் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News