மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானைமீது சந்தனக்குட ஊர்வலம் சென்றது

மணவாளக்குறிச்சியில் இருந்து மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு யானைமீது சந்தனக்குட ஊர்வலம் சென்றது
17-08-2014
மணவாளக்குறிச்சி தேவி நன்னெறி மன்றம் சார்பாக மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலுக்கு வருடந்தோறும் யானை மீது சந்தனக்குட ஊர்வலம் செல்வது வழக்கம். அதுபோல் இந்த வருட சந்தனக்குட ஊர்வலம் நேற்று நடந்தது. காலை 6 மணிக்கு மணவாளக்குறிச்சி யானை வரவழைத்த பிள்ளையார் கோவிலில் தீபாரதனையும், மதியம் 1 மணிக்கு சிறப்பு பூஜையும், 2 மணிக்கு மேளத்தாளத்துடன் தருவை நடேசர் ஆலயத்தில் இருந்து சந்தனம் கொண்டு வரப்பட்டது.
பின்னர் யானை வரவழைத்த பிள்ளையார்கோவிலில் இருந்து யானை மீது சந்தனக்குட ஊர்வலம் புறப்பட்டு மணவாளக்குறிச்சி சந்திப்பு, தருவை, பிள்ளையார்கோவில், பரப்பற்று வழியாக மண்டைக்காடு சென்றது. ஊர்வலத்தில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Post a Comment

Previous News Next News