மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள் சென்றது

மணவாளக்குறிச்சியில் இருந்து திருச்செந்தூருக்கு பறக்கும் காவடிகள் சென்றது
18-08-2014
மணவாளக்குறிச்சி அருகே உள்ள பரப்பற்று மணக்காட்டுவிளை சிவசக்தி கலா மன்றம் சார்பாக மன்ற ஆண்டு விழா, திருச்செந்தூர் முருகனுக்கு காவடி கட்டு விழா 2 நாட்கள் நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் காலையில் தீபாரதனையும், கொடியேற்று விழாவும், மாலையில் திருவிளக்கு பூஜையும் நடந்தது.
நேற்று காவடி பவனியும், தொடர்ந்து மதியம் அன்னதானமும் நடந்தது. பின்னர் செண்டைமேளத்துடன், பறக்கும் தொட்டில் காவடிகள், சூரியவேல் காவடி, வேல்காவடி, புஷ்பக்காவடி ஆகியவை மணக்காட்டுவிளையில் இருந்து புறப்பட்டு பரப்பற்று ஜனார்த்தன கிருஷ்ணன்கோவிலுக்கு சென்று, பின்னர் பிள்ளையார்கோவில், மண்டைக்காடு, கூட்டுமங்கலம், மணவாளக்குறிச்சி, அம்மாண்டிவிளை வழியாக திருச்செந்தூருக்கு சென்றது.

Post a Comment

Previous News Next News