குளச்சல் துறைமுகத்தில் தமிழக மீன்வளத்துறை ஆணையர் ஆய்வு
23-08-2014
குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் வளர்ச்சிப்பணிகள் நடைபெற்று வருகிறது. அலைத்தடுப்பு சுவர் கட்டும்பணி, கடல் அரிப்பை தடுக்க கோர்லாக் கட்டைகள் அடுக்கும்பணி, பெரிய பாறாங்கற்கள் கொட்டும்பணி, படகுகளை நிறுத்த படகு தளம் அமைக்க கடலை ஆழப்படுத்தும் பணி உள்பட பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை மீன்பிடித்துறைமுக பணிகளை மத்திய மீன்பிடித்துறைமுக இணை ஆணையர் சங்கர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் காலை தமிழக மீன்வளத்துறை ஆணையர் பியூலா ராஜேஷ், குளச்சல் துறைமுகத்துக்கு வந்து அங்கு நடைபெற்றுவரும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவர் 1 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஒவ்வொரு பணிகளாக ஆய்வு செய்தார்.
அவருடன் மீன்பிடித்துறைமுக செயற்பொறியாளர் மலையரசன், உதவி பொறியாளர்கள் அருள் போஸ்கோ, பிரகாஷ், மீன்வளத்துறை உதவி இயக்குனர் ரூபர்ட் ஜோதி, குளச்சல் காணிக்கை மாதா ஆலய பங்குத்தந்தை ஜோசப் ஜஸ்டஸ், ஊர் செயலாளர் தர்மராஜ், விசைப்படகு சங்க தலைவர் பர்ணபாஸ், செயலாளர் பிராங்ளின், துணைத்தலைவர் வின்சென்ட், துணை செயலாளர் வில்பிரட் ஆகியோர் வந்தனர்.
Tags:
சுற்றுவட்டார செய்திகள்