நாகர்கோவில் புத்தக திருவிழா கலைநிகழ்ச்சியில் சாலமன் பாப்பையா பட்டிமன்றத்தை பார்வையாளர்கள் ரசித்து கேட்டனர்
21-08-2014
நாகர்கோவிலில் குமரி மாவட்ட கல்வி நிறுவனங்கள், தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் ஆகியவை இணைந்து, குமரி மாவட்ட நிர்வாகத்தின் ஒத்துழைப்போடு புத்தகத்திருவிழாவை நாகர்கோவில் எஸ்.எல்.பி. மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நடத்தி வருகிறது. இதில் ஒவ்வொரு நாளும் மாலை வேளையில் பல்வேறு நிகழ்வுகள் விழா மேடையில் நடந்து வருகிறது.
புத்தக திருவிழாவின் 5-ம் நாள் விழாவான நேற்று பட்டிமன்ற சக்கரவர்த்தி சாலமன் பாப்பையா நடுவராக பங்குபெற்ற பட்டிமன்ற நிகழ்ச்சி நடைபெற்றது. “தனிமனித முன்னேற்றத்தை தீர்மானிப்பது விதியா? மதியா?” என்ற தலைப்பில் பட்டிமன்ற நிகழ்ச்சி நடந்தது. இதில் பட்டிமன்ற பேச்சாளர்களான தா.கு. சுப்பிரமணியன், ராஜா உள்ளிட்டோர் பேசினர்.
பட்டிமன்றத்தை ஏராளமானோர் ரசித்து கேட்டனர். நிகழ்ச்சி முடிவில் நாகர்கோவில் துணை போலீஸ் சூப்பிரண்டு பேச்சி முத்துப்பாண்டியன் நன்றி கூறினார்.
Photos: Puthiyapuyal Murugan
Tags:
குமரிமாவட்ட செய்திகள்