மணவாளக்குறிச்சியில் பரபரப்பு: ½ மணி நேர போக்குவரத்து பாதிப்பு
03-07-2014
மணவாளக்குறிச்சியில் நேற்று காலை வேளையில் சுமார் ½ மணி நேரம் திடீர் போத்துவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தற்போது மணவாளக்குறிச்சி வழியாக அதிக அளவில் வாகனங்கள் சென்று வருகிறது. அதோடு குளச்சல் துறைமுக பணிக்காக லாரிகளில் பெரிய கற்களை ஏற்றி கொண்டு செல்லப்படுகிறது. இதனால் எப்போதுமே வாகனங்கள் அதிக அளவில் சென்று வருகின்றன.
இந்நிலையில் நேற்று காலை வேளையில் வழக்கம் போல் மெயின் ரோட்டில் வாகனங்கள் சென்று வந்தன. அப்போது அரசு பேருந்து ஒன்று மணவாளக்குறிச்சி ஜங்சன் பகுதியில் வந்த பொது திடீரென “ப்ரேக் டவுன்” ஆகி சாலையின் நடுப்பகுதியில் நின்றது. இதனால் சாலையின் இருபுறமும் வந்த வாகனங்கள் அப்படியே நின்றது. எந்த வாகனத்திற்கும் செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.
பேருந்தை தள்ளும் பொதுமக்கள் |
வாகனங்கள் “ஹாரன்” அடித்த வண்ணம் நின்றது. உடனே பொதுமக்கள் சிலர் திரண்டு வந்து நடுரோட்டில் “ப்ரேக் டவுன்” ஆகி நின்ற பேருந்தை கைகளால் தள்ளி ரோட்டில் ஓரத்தில் நிறுத்தினர். இதை தொடர்ந்து வாகனங்கள் சென்றன. இதனால் சுமார் ½ மணி போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
அப்துல் ரஹீம்
Tags:
Manavai News