ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் ரூ.25 லட்சம் மதிப்பில் அம்மா உணவக புதிய கட்டிடம்
06-07-2014
நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியின் கூடுதல் கட்டிடத்துக்கு எதிர்புறம் அம்மா உணவக கட்டிடம் கட்டப்பட இருக்கிறது. இதற்கான பூமி பூஜை நடந்தது. நிகழ்ச்சிக்கு குமரி மாவட்ட கலெக்டர் (பொறுப்பு) மற்றும் மாவட்ட வருவாய் அதிகாரி உதயகுமார் தலைமை தாங்கி, பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாடு வக்பு வாரிய தலைவரும், குமரி மாவட்ட அ.தி.மு.க. பொறுப்பாளருமான தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர் கே.டி.பச்சைமால், நாஞ்சில் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட மக்கள் தொடர்பு அதிகாரி அண்ணா, அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் டாக்டர் குணசிங், நாகர்கோவில் நகரசபை தலைவர் மீனாதேவ், மாவட்ட பால்வளத் தலைவர் அசோகன், மாவட்ட பஞ்சாயத்து தலைவர் சாரதாமணி, முன்னாள் அரசு வக்கீல் சிவசெல்வராஜன், முன்னாள் எம்.எல்.ஏ. ராஜன், சந்திரன், எஸ்.எம்.பிள்ளை, இ.என்.சங்கர், ஜெகதீஷ், கவுன்சிலர் சகாயராஜ், நகராட்சி என்ஜினீயர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.
அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அமைய உள்ள அம்மா உணவக கட்டிடத்தில் பணம் செலுத்துவதற்கான கவுன்டர், ஸ்டோர் ரூம், சமையல் அறை, சாப்பிடுவதற்கான ஹால் போன்றவை கட்டப்பட உள்ளன.
Tags:
District News