நாகர்கோவில் ரெயில் நிலையத்தில், ரூ.36½ லட்சம் செலவில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தொடங்கியது

நாகர்கோவில் ரெயில் நிலையத்தில், ரூ.36½ லட்சம் செலவில் நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தொடங்கியது
06-07-2014
நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை, கோவை, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலப்பகுதிகளுக்கு ரெயில்கள் இயக்கப்படுகின்றன. எனவே இந்த ரெயில் நிலையத்துக்கு வந்து செல்லும் பயணிகளின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தென்னக ரெயில்வேயில் ‘ஏ’ கிரேடு பெற்ற நிலையங்களில் நாகர்கோவில் கோட்டார் சந்திப்பு ரெயில் நிலையமும் ஒன்று.

எனவே இந்த ரெயில் நிலையத்தை தரம் உயர்த்தும் வகையில் ரெயில்வே துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அதில் முதல் கட்டமாக முதலாவது நடைமேடையில் இருந்து 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளுக்கு செல்லக்கூடிய பயணிகள் அல்லது 2-வது மற்றும் 3-வது நடைமேடைகளில் இருந்து முதலாவது நடைமேடைக்கு வரக்கூடிய பயணிகள் படிக்கட்டுகள் வழியாக ஏறி இறங்குவதற்கு பதிலாக எளிதாக சென்று வர வசதியாக ரெயில் நிலையத்தில் நகரும் படிகட்டு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து தற்போது அதற்கான ஆய்வுப்பணிகள் முடிவடைந்துள்ள நிலையில் ரூ.36 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து நகரும் படிக்கட்டு அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது. இந்த பணியின் முதல் கட்டமாக முதலாவது நடைமேடையில் பில்லர்கள் அமைப்பதற்கான குழிகள் தோண்டப்பட்டுள்ளன.

Post a Comment

Previous News Next News